உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் முழு சுகாதார திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.1.8 கோடி நிதி

மாவட்டத்தில் முழு சுகாதார திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.1.8 கோடி நிதி

விழுப்புரம்:முழு சுகாதார திட்டத்தின்படி திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கருத்தரங்கிற்கு கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர்(சுகாதாரம்) ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட திட்ட இயக்குனர் முத்துமீனாள், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சரசு, கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கலெக்டர் மணிமேகலை பேசியதாவது :திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த விழுப்புரம் மாவட்ட முழு சுகாதார இயக்கத்திற்கு மத்திய, மாநில அரசுகள் 1 கோடி 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த தொகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 60 யூனிட்டுகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பேப்பர், இலைகள், பூண்டு போன்ற மக்கும் குப்பைகளை சேகரிப்பதற்கு பச்சை நிற தொட்டியும், பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு போன்ற மக்காத பொருட்களை சேகரிப்பதற்கு சிவப்பு நிற தொட்டியும் வைக்கப்படுகிறது. இதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து உதவ வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.எக்ஸ்னோரா அமைப்பு இணை பொதுச்செயலாளர் பொன்கலைமணி, பொறுப்பாளர்கள் கனகராஜ், பாலச்சந்திரன், கிருஷ்ணகுமார், நேர்முக உதவியாளர்(பொது) மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை