| ADDED : செப் 18, 2011 10:27 PM
திருக்கோவிலூர்:விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (19ம் தேதி) முதல் 3
நாட்களுக்கு கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் விருப்ப மனுக்களை தாக்கல்
செய்யலாம்.இது குறித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் சிவராஜ்
விடுத்துள்ள அறிக்கை:விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்.,சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட
விரும்புவோர் மனுக்களை இன்று (19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். கள் ளக் குறிச்சி நகரம், ஒன்றியம், சின்னசேலம் நகரம்,
ஒன்றியம். கல்வராயன் மலை, சங்கராபுரம் நகரம், ஒன்றியம், தியாக துருகம்
நகரம், ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சி மகாலஷ்மி
திருமணமண்டபத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மனு
கொடுக்கலாம்.திருக்கோவிலூர் நகரம், ஒன்றியம், ரிஷிவந்தியம் ஒன்றியம்,
முகையூர் ஒன்றியம், மணலூர்பேட்டை, அரகண்டநல்லூர் நகரம், திருவெண்ணெய்
நல்லூர் நகரம், ஒன்றியம், திருநாவலூர் ஒன்றியம், உளுந்தூர்பேட்டை நகரம்,
ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் திருக்கோவிலூர் நவநீதம் திருமண மண்டபத்தில் மனு
கொடுக்கலாம்.