உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகார் கொடுத்துஒரு மாதத்திற்கு பிறகு வழக்கு

புகார் கொடுத்துஒரு மாதத்திற்கு பிறகு வழக்கு

மரக்காணம்:மரக்காணம் போலீசில் இளம்பெண் மாயம் குறித்த புகார் மீது ஒரு மாதத்திற்கு பின் வழக்குப் பதிந்தனர்.மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் கவுசல்யா, 21. இவர் ரங்கநாதபுரத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி பெற்று வந்தார். கடந்த மாதம் 22ம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை. இது குறித்து மரக்காணம் போலீசில் கடந்த மாதம் 23ம் தேதி கிருஷ்ணமூர்த்தி புகார் கொடுத்தார். இதன் மீது நடவடிக்கை கோரி அவர் நடையாய் நடந்த பின், நேற்று முன்தினம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை