உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர்கள் கவுன்சிலிங்47 பேருக்கு இடமாற்றம்

ஆசிரியர்கள் கவுன்சிலிங்47 பேருக்கு இடமாற்றம்

விழுப்புரம்:விழுப்புரத்தில் நடந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 47 பேருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கப்பட்டது.முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று விழுப்புரம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., குப்புசாமி தலைமை தாங்கினார். டி.இ.ஓ.,க்கள் பூபதி, சண்முகம் மற்றும் தலைமையாசிரியர்கள் அரிதாஸ், ராஜேந்திரன், தங்கராஜ், நடராஜன், அப்துல் சர்தார், கோபாலகிருஷ் ணன், ரேவதி, சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்தாய்வை நடத்தினர்.இதில் கலந்து கொண்ட 76 ஆசிரியர்களில் 47 பேருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை