உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காங்., கவுன்சிலர் விருப்ப மனு

காங்., கவுன்சிலர் விருப்ப மனு

விழுப்புரம்:செஞ்சி பேரூராட்சியில் போட்டியிட மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் சையத் சாதுல்லா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. மாவட்ட சிறு பான்மைப் பிரிவுத் தலைவர் சையத் சாதுல்லா நேற்று செஞ்சி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். இவர் தற்போது வார்டு கவுன்சிலர் பதவி வகித்து வருகிறார்.மாநில காங்., கமிட்டி மேலிட பார்வையாளர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் தனுசு மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட இளைஞர் காங்., தலைவர் ரமேஷ், செஞ்சி வட்டத் தலைவர் சரவணன், மகிளா காங்., கஸ்தூரி செல்லாராம், நிர்வாகிகள் வரதகணேசன், வழக்கறிஞர்கள் சுப்பையா, பாலசுப்ரமணி, நிர்வாகிகள் ஜோதிராஜா, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை