மேலும் செய்திகள்
நாளை மின்தடை
11 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
11 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
11 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
11 hour(s) ago
விழுப்புரம்:முன்விரோத தகராறில் ஐகோர்ட் வக்கீலை தாக்கிய முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை பழவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்,39. ஐகோர்ட் வக்கீலாக பணிபுரிகிறார். இவர் விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் 4 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த நிலப்பிரச்னை தொடர்பாக மகாராஜபுரம் பகுதி முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் பாபுவுக்கும், விஜயகுமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு ஆனாங்கூரில் உள்ள நிலத்திற்கு விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இந்தியன் வார பத்திரிக்கை முதன்மை நிருபர் வராகி, போட்டோகிராபர் மகேஷ் காரில் வந்தனர். இதையறிந்த முன்னாள் கவுன்சிலர் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து விஜயகுமாரை வழிமறித்து கத்தியால் தாக்கினர். இதில் காயமடைந்த விஜயகுமார், வராகி, மகேஷ் மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.புகாரின் பேரில் விழுப் புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து முன்னாள் கவுன்சிலர் பாபு உட்பட ரவி, தண்டபாணி, கேசவன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago