உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் வழக்கறிஞர்கள் மத்தியில்தி.மு.க.,- அ.தி.மு.க., "ஈகோ பிரச்னை

விழுப்புரம் வழக்கறிஞர்கள் மத்தியில்தி.மு.க.,- அ.தி.மு.க., "ஈகோ பிரச்னை

விழுப்புரம்:முன்னாள் அரசு வழக்கறிஞர் மீதான வழக்கை நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் தி.மு.க., வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்காமல், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் வழக்கம் போல் நேற்று கோர்ட் பணிகளில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அ.தி.மு.க., பிரமுகர் மதுரைக்கண்ணு என்பவரின் இடத்தை மிரட்டி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி சேர்மன் மஸ்தான், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.இந்த வழக்கிலிருந்து முன்னாள் அரசு வழக்கறிஞர் சுப்ரமணியனை விடுவிக்க வலியுறுத்தி விழுப்புரம் தி.மு.க., வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்காமல், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் வழக்கம் போல் நேற்று கோர்ட் பணிகளில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்: போலீசாரை கண்டித்து நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்வது, வரும் 26ம் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இத்தகவலை சங்க தலைவர்கள் தமிழ்செல்வன், துளசிங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் நடராஜன், கல்பட்டு ராஜா தெரிவித்தனர்.ஆட்சேபம்: அ.தி.மு.க., வழக்கறிஞர்களை கலந்தாசிக்காமல் சங்க கூட்டத்தில் ஒரு மனதாக கோர்ட் புறக்கணிப்பு தீர்மானம் நிறைவேற்றிய சங்க தலைவரை பதவி நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அனைத்து வழக்கறிஞர்கள் சங்க தலைவராக உள்ள தமிழ்செல்வன், சங்க உறுப்பினர்களை ஆலோசிக்காமல் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக அறிவித்துள்ளார். இதை கண்டிப்பதாகவும், அவரை சங்க பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் மாவட்ட அரசு வழக்கறிஞர் பொன் சிவா தலைமையில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கல்பட்டு ராமலிங்கம், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், அழகுவேல், ராகவன், பாஸ்கரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சங்கரனிடம் புகார் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி