உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்

மாவட்ட தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் : மாவட்ட தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சிவா, சண்முகம், வினாயகம், காதர்பாஷா முன்னிலை வகித்தனர். கணபதி வரவேற்றார். மாநில பட்டதாரி ஆசிரியர்கள் அணி செயலாளர் ரவீந்திரன், மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் ராஜா சந்திரசேகர், மாநில ஆசிரியர் பட்டதாரிகள் அணி செயலாளர் துரை சாமி சிறப்புரையாற்றினர். எதிர் கட்சி தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவிப்பது. விழுப்புரத்தில் தொழிற் சாலைகள் கொண்டு வர வேண்டும். அரசு கட்டடங்களை அதிகாரிகள் நேர்மையான முறையில் ஏலம் விட வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகளை தவிர்க்க வங்கி செயலாளர்களை அரசு ஊழியர்கள் போல் இடமாற்றம் செய்ய வேண்டும்.மாவட்ட தே.மு.தி.க., விற்கு புதிய கட்டடம் கட்டி கேப்டன் அறிவரங்கம் என பெயர் சூட்டுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட விவசாய அணி செயலாளர் அயில், துணைச் செயலாளர் பன்னீர் செல்வம், நகர செயலாளர் நரசிம்மலு பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயமூர்த்தி, குமார், செல்வராஜ், கோவிந்தன், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆசிரியர் பட்டதாரிகள் அணி செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை