உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆந்திராவிலிருந்து வந்த 3500 டன் ரேஷன் அரிசி

ஆந்திராவிலிருந்து வந்த 3500 டன் ரேஷன் அரிசி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க ஆந்திர மாநிலத்திலிருந்து 3500 டன் அரிசி ரயிலில் வந்தது.ஆந்திர மாநிலம் ஜம்மிகுண்டா, இந்திய உணவு கார்ப்பரேஷன் கிடங்கில் இருந்து ரயிலில் 50 கிலோ மூட்டைகளாக 57 வேகன்களில் 3500 டன் அரிசி ஏற்றிய கூட்ஸ் ரயில் நேற்று முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தது. கடலூர் இந்திய உணவு கழக உதவி அதிகாரி பாலகிருஷ்ணன், விழுப்புரம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாளர் முருகன், உதவி மேலாளர் முத்துசாமி, கிளார்க் மணி, கூட்ஸ் ஷெட் காண்ட்டிராக்ட் மேலாளர் சுதாகர் மேற்பார்வையில் ரயிலில் வந்த அரிசி மூட்டை களை ரயில்வே கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் ஆர்வமுடன் 200 லாரிகளில் ஏற்றி விழுப்புரம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை