உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பண மோசடி விவசாயி புகார்

பண மோசடி விவசாயி புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராமநாதன், 49. இவரிடம் சித்தாத்தூர் காலனியை சேர்ந்த தாமோதரன் என்பவர் கடந்தாண்டு மே 26ம் தேதி நிலம் கிரையம் செய்து தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கினர். பின்னர் நிலத்தை கிரையம் செய்து கொடுக்க மறுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்ட ராமநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ