உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபுரத்தில் மாணவிகள் பேரணி

சங்கராபுரத்தில் மாணவிகள் பேரணி

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின பேரணி நடந்தது. சங்கராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த பேரணிக்கு தலைமை ஆசிரியை கலைச் செல்வி தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் வெங்கடேசன், வள்ளலார் மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் டாக்டர் முத்துகுமார், சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தமிழ்மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி