உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி

செஞ்சி: என்.ஆர். பேட்டை ஊராட்சியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். செஞ்சி அடுத்த என்.ஆர். பேட்டை ஊராட்சி பூமியாங்குட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வாக்காளர்களிடம் வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கி வருகின்றனர். இப்பணியினை மஸ்தான் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார். பணியில் இருந்த தி.மு.க., ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பாக முகவர்கள், டிஜிட்டல் ஏஜன்ட்டுகளிடம் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு தகுதியானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது செஞ்சி சேர்மன் விஜயகுமார், ஊராட்சி தலைவர் பிலால், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர் நுார்ஜகான் ஜாபர், வனக்குழு தலைவர் ராமு, நிர்வாகிகள் சங்கர், சிவா, தொண்டரணி பாஷா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை