உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மயிலம் முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் இன்று 9ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் உற்சவர் அருள்பாலித்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் மலைவலக் காட்சி நடந்தது.இன்று 9ம் தேதி இரவு 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை 10ம் தேதி அதிகாலை 5: 46 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை