மேலும் செய்திகள்
விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி
01-Nov-2025
கண்டாச்சிபுரம்: முகையூர் அடுத்த மேல்வாலை ஊராட்சியில் ஒடுவன்குப்பம் பகுதியில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை ஊராட்சிக்குட்பட்ட ஒடுவன்குப்பம் பகுதியில் உள்ள தெருக்கள் சேதமாகி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்கு தெருவில் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. குறிப்பாக முத்துமாரியம்மன் கோவில் தெருவில் இரண்டு பக்கமும் பள்ளமாகவும் மாறி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. இப்பகுதி சாலையை சீரமைத்து சிமென்ட் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Nov-2025