| ADDED : பிப் 13, 2024 05:22 AM
திண்டிவனத்தில் மேம்பால சீரமைப்பு பணிகள் நடப்பதால், ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் மூடப்பட்டுள்ள, காவேரிப்பாக்கம் வழியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் ரயில்நிலையத்திற்கு, மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி வழியாகவும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வழி மற்றும் காவேரிப்பாக்கம் ரயில்வே தரைப்பாலம் வழி என 3 வழிகள் உள்ளது.இதில், காவேரிப்பாக்கம் பகுதியில், இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்ததால், ரயில்வே நிர்வாகம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்த வழியை அடைத்து விட்டனர்.இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் ஒரே சமயத்தில், மேம்பால சீரமைப்பு பணிக்காக செஞ்சி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இதேபோல், திண்டிவனம் நேரு வீதியில் பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகிறது.இதனால் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்திற்கு வாகனங்களில் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தான் தினந்தோறும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வாகன நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவித்து வரும் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேம்பால சீரமைப்பு பணிகள் முடிக்கும் வகையில், தற்காலிகமாக, மூடப்பட்டுள்ள காவேரிப்பாக்கம் பகுதி வழியை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டால், நகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் ஒரளவிற்கு குறையும்.பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் காவேரிப்பாக்கம் பகுதி வழியை உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.