மேலும் செய்திகள்
28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
1 minutes ago
செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்
3 minutes ago
எஸ்.ஐ.ஆர்., பணி தி.மு.க.வினர் ஆய்வு
6 minutes ago
வி ழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைத்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நுாற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளி, ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. நீண்டகாலமா க, பழமை மாறாமல் கட்டடங்கள் நிலைத்து நிற்கும் நிலையில், போதிய கண்காணிப்பின்றி அதன் பழம் பெருமை சிதைந்து வருகிறது. ஒரு காலத்தில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆங்கிலம், தமிழ் வ ழியில் கல்வி அளித்த இப்பள்ளி, அதன் தரத்தை படிப்படியாக இழந்து நிற்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், 2 உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என பட்டாளம் இருந்தாலும், பல லட்சம் ரூபாய் அரசு செலவிட்டும், மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்த வழியின்றி உள்ளது. சில மாணவர்கள் பள்ளி வளாகத்திலே போதை வஸ்துக்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பழம்பெரும் இந்த அரசு பள்ளியை, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, மீட்டெடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பெரும்பாலும் ஏழை மாண வர்கள் இங்கு வருகின்றனர். பெற்றோர் கவனிப்பில்லாத அவர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. பாடம் நடத்துவதை கவனிப்பதில்லை. கண்டிக்கும் ஆசிரியர்களையும் மிரட்டும் நிலை உள்ளது. அதனால், ஆசிரியர்கள் கண்டும் காணாமல் போவதாக தெரிவித்தனர்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago