உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தல் கோட்டக்குப்பத்தில் பெண் கைது

ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தல் கோட்டக்குப்பத்தில் பெண் கைது

வானூர் : இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு ஸ்கூட்டரில் மதுபாட்டில்கள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் கலால் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் தலைமை காவலர்கள் செல்வம், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர், கீழ்புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னை நோக்கி ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை மடக்கி விசாரித்தனர். அப்பெண் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரது ஸ்கூட்டரை ஆய்வு செய்தனர். சீட்டுக்கு அடியில், 96 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், மதுபாட்டில் கடத்தி சென்றது, செய்யூர் தாலுகா வெள்ளகொண்ட அகரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ரேவதி, 35; என்பதும், புதுச்சேரி கனகசெட்டிக்குளம் பகுதியில் மதுபாட்டில்கள் வாங்கி சென்று, தமிழகப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. போலீசார் ரேவதியை கைது செய்து, 96 மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை