மேலும் செய்திகள்
கொத்தனார் தற்கொலை
27-Sep-2024
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வயிற்று வலியால் இளம் பெண் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுவேதா, 22; காதலித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.சுவேதாவுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த 20ம் தேதி காலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்தார். உடன், சென்னை, ஸ்டான்லி மருந்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் அதிகாலை 6:00 மணியளவில் இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Sep-2024