மேலும் செய்திகள்
ஜன்பத் மினி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
22-Aug-2025
திண்டிவனம்:திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையம் அருகிலுள்ள கிடங்கல்(1) பகுதியில் இருந்த தரைப்பாலம், பெஞ்சல் புயலின் போது, அடியோடு அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் நகராட்சி சார்பில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பாலத்தையொட்டி, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில், நகராட்சி பொறியாளர் சரோஜா, நகரமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதற்கு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் வழங்கிவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். மேலும் மின் இணைப்பை துண்டிக்காமல் எப்படி ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கலாம் என்று கேட்டு, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
22-Aug-2025