உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுப்பேட்டை பள்ளியில் உலக தாய்மொழி தினம்

புதுப்பேட்டை பள்ளியில் உலக தாய்மொழி தினம்

செஞ்சி : புதுப்பேட்டை அரசு துவக்க பள்ளியில் உலக தாய் மொழி தின விழா நடந்தது. அனந்தபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு துவக்கப் பள்ளியில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் உலக தாய்மொழி தினம் விழா நடந்தது. ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெயந்தி முன்னிலை வகித்தார். தாய் மொழியின் பெருமைகளை எடுத்து கூறி, தாய்மொழியை காக்க வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியை உமா, ரோட்டரி பொருளாளர் அஜிஸ், முனியன், கிருபா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை