உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் உலக சாதனை கோலப்போட்டி

ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் உலக சாதனை கோலப்போட்டி

செஞ்சி : ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் நடந்த கோலப்போட்டி 'அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு' புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் கல்லுாரி மற்றும் வணிக நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் 3006 பேர் பங்கேற்று 601 கோலங்கள் போட்டனர்.நிகழ்ச்சியை 'அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு' உலக சாதனை புத்தகத்தின் நடுவராக வழக்கறிஞர் வேன்விழி பதிவு செய்தார். நிகழ்ச்சி முடிவில் அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் கல்லுாரி தாளாளர் ரங்க பூபதி, செயலாளர் ஸ்ரீபதி ஆகியோரிடம் வழங்கப்பட்டது. கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி, பேராசிரியர்கள், மாணவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை