உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  உலக கழிவறை தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

 உலக கழிவறை தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காங்கேயனுாரில், பவ்டா நிறுவனம் சார்பில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி பொது மேலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர் கவுஸ், உதவி பொது மேலாளர் ஆரோக்கியசாமி கழிவறையின் முக்கியத்துவம், அவசியம் குறித்து விளக்கவுரையாற்றினர். ஊர்வலத்தின் போது, கழிவறை இல்லாத குடும்பங்களுக்கு கழிவறை கட்டுவதற்கு பவ்டா நிதியுதவி அளிக்கும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலாளர் விஜயா, ஊக்குநர் ேஹமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி