உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் ஆராய்ச்சி மகள் லட்சுமி, 18; பத்தாம் வகுப்பு படித்து முடித்து தனியார் கம்பெனியில் தினக் கூலியாக பணிபுரிந்து வந்தார்.இவரது வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த லட்சுமி நேற்று முன்தினம் மாலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.உடன், சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !