உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

 கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மதியம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையம் பகுதியில் சந்தேகப்படும்படி பைக்குடன் நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர் விற்பனைக்காக 230 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம், வழுதரெட்டி காந்தி நகரைச் சேர்ந்த சீனுவாசன் மகன் மணிகண்டஈஸ்வரன், 21; என்பதும், இவருக்கு சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த ஜோயல், 25; என்பவர் கஞ்சா வழங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிந்து, மணிகண்ட ஈஸ்வரனை கைது செய்து கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை