கஞ்சா விற்ற வாலிபர் கைது; 1.5 கிலோ பறிமுதல்
விழுப்புரம்; விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.விழுப்புரம் கே.கே., ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக டவுன் போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில், இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர். அங்கு, கஞ்சா வைத்திருந்த மூவரை போலீசார் பிடிக்க முயன்ற போது 2 பேர் தப்பியோடினர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.விசாரணையில், பிடிபட்டவர் கே.கே., ரோடு அண்ணா நகரை சேர்ந்த ரவி மகன் வானவராயன் (எ) ராகுல், 24; தப்பியோடியது தனுஷ்ராஜ், 19; விஷால், 20; னெ்பது தெரியவந்தது. ராகுலிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராகுலை கைது செய்து, தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.