ஆடு திருடிய வாலிபர் கைது
வானுார்: கிளியனுார் அருகே ஆடு திருடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 50; இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மதியம் வீட்டின் எதிரில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒரு ஆட்டை திருடி, தனது பைக்கில் கொண்டு செல்ல முயன்றார்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், திண்டிவனம் பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் கமல்தாஸ், 35; என்பதும், ரம்ஜான் பண்டிகைக்காக ஆடு திருடி விற்க முயன்றதும் தெரிய வந்தது. உடன் கமல்தாஸ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.