உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனை பிரச்னையில் வாலிபர் மீது தாக்குதல்

மனை பிரச்னையில் வாலிபர் மீது தாக்குதல்

விழுப்புரம்; தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 25; இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கனகராஜ், 45; என்பவருக்கும், வீட்டுமனை அளவீடு செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த ஆக., 31ம் தேதி வேல்முருகனிடம், கனகராஜ் மற்றும் வல்லரசு, அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் வீண் தகராறு செய்து தாக்கினர். வளவனுார் போலீசார், கனகராஜ் உள்ளிட்ட நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !