உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி வாலிபர் பலி

பைக் மோதி வாலிபர் பலி

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பம் கிராமம் மடப்பட்டு - திருக்கோவிலுார் சாலை வழியாக 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் நேற்று இரவு 8 மணியளவில் நடந்து சென்றார்.அப்போது அவ்வழியாக பின்னால் வந்த பைக் வாலிபர் மீது மோதியது. அதில் வாலிபர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை