மேலும் செய்திகள்
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
16-Oct-2025
அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
31-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஐந்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நேற்று தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக டிராக்டரை ஓட்டி வந்த, கண்டாச்சிபுரம் அருகே பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகமுத்து மகன் நாகராஜ்,20; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதே போல், நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே சப்-இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்த போது, அதிவேகமாக பைக் ஓட்டி வந்த புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வேலன் மகன் கீர்த்திவாசன்,21; மதன்ஜோசப் பட்டேல் மகன் ஆதித்யபட்டேல்,21; வைத்திக்குப்பத்தை சேர்ந்த பெருமாள் மகன் மகேஷ்,20; சோலை நகரை சேர்ந்த கண்ணன் மகன் விஷ்ணு,22; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
16-Oct-2025
31-Oct-2025