உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதன்மை நகராட்சியாக மாற்றுவதே லட்சியம் :தி.மு.க., வேட்பாளர் தேவகி உறுதி

முதன்மை நகராட்சியாக மாற்றுவதே லட்சியம் :தி.மு.க., வேட்பாளர் தேவகி உறுதி

ஸ்ரீவில்லிபுத்தூர் : ''ஸ்ரீவில்லிபுத்தூரை மாவட்டத்தில் முதன்மை பெற்ற நகராட்சியாக மாற்றுவேன்,'' என, தி.மு.க, வேட்பாளர் தேவகி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தி.மு.க.,சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நகராட்சி தலைவராக இருந்த தாமரைக்கனியின் மனைவி தேவகி போட்டியிடுகிறார். இவர் கூறியதாவது:தினமும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை களைவதோடு 24 மணிநேரமும் மக்களுக்காக பணியாற்றுவேன். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க எனது கணவர் தாமரைக்கனி தலைவராக இருந்த போது, அத்திக்கோயில் பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வர, 10.5 கோடி ரூபாய் செலவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.,வினர் எதிர்த்தனர். இதனால் எனது கணவரின் முயற்சியால் ,தாமிரபரணி தண்ணீர் கொண்டு வர ,2005ல் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது தாமிரபரணி தண்ணீர் கிடைத்து வருகிறது. மேடான பகுதி மக்களுக்கும் குடிநீர் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் பொதுக்குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து தெருக்களிலும் பிளாஸ்டிக் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஐ.எஸ்.ஓ., தரம் வாய்ந்த மின் மோட்டார்கள் பொருத்தப்படும். அனைத்து வார்டு பகுதிகளிலும் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டும். சுகாதாரத்தில் மாவட்டத்தில் முதல் நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூரை மாற்றுவேன். எனது கணவர் காலத்தில்தான் முதன் முதலில் நகரில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டன. அதே போல் தேவைப்படும் இடங்களில் ஹைமாஸ் விளக்குகள், தெருக்கள் தோறும் சோடியம் விளக்குகளும் போடப்படும். நகராட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகம் ஏற்படுத்தப்படும். பிறப்பு, இறப்பு, பெயர் மாற்றம், கட்டட அப்ரூவல் போன்றவைகளுக்காக மக்களை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டாள் கோயில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்க தொழிலதிபர்களை சந்தித்து,ஸ்ரீவி., நகரில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவரது மகனும், முன்னாள் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தங்கமாங்கனி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை