UPDATED : ஜன 25, 2024 06:21 AM | ADDED : ஜன 25, 2024 04:49 AM
ராஜபாளையம்; ராஜபாளையம் வடக்கு ஆண்டாள் புரத்தில் ராகவேந்தரா பிருந்தாவன பிரதிஷ்டை விழா நடந்தது. ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தில் ராகவேந்திரர் கோயிலை புனரமைத்து சுவாமி பிரதிஷ்டை செய்யும் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், கும்ப பிரதிஷ்டை நடந்தது. மாலை 5:00 மணிக்கு பாராயணம் சொற்பொழிவை தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை விக்ரஹ பிரதிஷ்டையும் நடைபெற்றது.நேற்று காலை மூன்றாம் கால யாக பூஜை அபிஷேகம் தொடங்கி காலை 10:00 மணிக்கு ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவன பிரதிஷ்டை நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடைபெற்றது. இரவு பிரகலாதர் வீதி உலா ,தீப ஆராதனை நடந்தது.