உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலி கையெழுத்திட்டு ரூ.2 லட்சம் மோசடி

போலி கையெழுத்திட்டு ரூ.2 லட்சம் மோசடி

விருதுநகர் : விருதுநகர் அருகே வங்கி காசோலைகளில் போலி கையெழுத்திட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி. சகோதரர்களான இவர்கள் கூட்டாக வியாபாரம் செய்த நிலையில், விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கி காரியாபட்டி கிளையில் கூட்டாக சேமிப்பு கணக்கு வைத்திருந்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் பிரச்னையால் இருவரும் பிரிந்தனர். 2008ல் ராஜேந்திரன் இறந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கிருஷ்ணமூர்த்தி, வங்கி காசோலைகளில் ராஜேந்திரன் கையெழுத்தை தானே எழுதி 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார். ராஜேந்திரன் மகன் காளிதாஸ் புகார்படி விருதுநகர் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ