உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கில் மனைவியின் உறவினர்கள் உட்பட 4 பேர் கைது

இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கில் மனைவியின் உறவினர்கள் உட்பட 4 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இறைச்சிக்கடை உரிமையாளர் பிரசாந்த் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியின் உறவினர்கள் 3 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகாசி தாலுகா கிருஷ்ணமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 28, இறைச்சிக்கடை உரிமையாளர். இவர் ஜூன் 16 அதிகாலை கிருஷ்ணன்கோவிலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரசாந்த், திருமணமான சில மாதங்களில் மனைவி மகாலட்சுமியை விட்டு பிரிந்துள்ளார். ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையிலும் பிரசாந்த் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ வில்லை. எனவே, மகாலட்சுமியின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இக்கொலை தொடர்பாக மகாலட்சுமியின் அத்தை மகன்களான ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லணை ஓடை தெருவை சேர்ந்த கண்ணன், 35, சதீஷ்குமார், 21, கிருஷ்ணன் கோவில் வளையபட்டியை சேர்ந்த முத்துக்குமார், 27 அவர்களது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன், 28, உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.இதில் தங்களது தாய் மாமா மகளான மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழுமாறு, உறவினர்கள் பலமுறை கூறியும் பிரசாந்த் மறுத்துள்ளார். இதனால் மகாலட்சுமி குடும்பத்தினர் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் கோபமடைந்த மூவரும், தங்களது நண்பர் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து பிரசாந்தை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கிருஷ்ணன்கோவில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ