மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
ராஜபாளையம் : ராஜபாளையம் டி.எஸ்.பி., அலுவலகம் முன் இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி 32, கூனங்குளத்தை சேர்ந்த வெள்ளைச்சாமியை 2012ல் காதல் திருமணம் செய்தார். விஜய தர்ஷினி 10, சந்திர பிரபா 5, என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு 2023ல் வெள்ளைச்சாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவர் மீது நடவடிக்கை கோரி மகளிர்போலீஸ் ஸ்டேஷனில்புகார் அளித்ததால் கொலை மிரட்டல் அதன் பின் நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு வழக்குகள் உள்ளது. போலீசார் வெள்ளைச்சாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ராஜபாளையம் டி.எஸ்.பி., அலுவலகம் முன் கிருஷ்ணவேணி தனது இரண்டு மகள்கள், தாய் மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். டி.எஸ்.பி., அழகேசன் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் கிருஷ்ணவேணி போராட்டத்தை கைவிட்டார்.
12 hour(s) ago
12 hour(s) ago