உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர்- தென்காசி வழித்தடத்தில்110 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில்

விருதுநகர்- தென்காசி வழித்தடத்தில்110 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில்

விருதுநகர்: விருதுநகர் - - தென்காசி வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.விருதுநகர் வழியாக தென்காசியில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரயில் கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.பயணிகள் ரயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் நடந்து முடிவடைந்து விட்டது. விருதுநகர் -- தென்காசி வழித்தடத்தில் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் இனி 110 கி.மீ., வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும் ராஜபாளையம், - சங்கரன்கோவில், வழித்தடத்தில் மணிக்கு 100 கி.மீ., சிவகாசி, - ஸ்ரீவில்லிப்புத்துார்,- ராஜபாளையம், - சங்கரன்கோவில், கடையநல்லுார் - தென்காசி, - பம்பா கோவில் சாண்டி வழித்தடங்களில் உள்ள வளைவுகளில் 5 கி.மீ., வேகம் அதிகரித்து மணிக்கு 95 கி.மீ., வேகத்தில் இயக்க தெற்கு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ