உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2408 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2408 வழக்குகளுக்கு தீர்வு

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி கவிதா, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர்.இதில் நிலுவையில் உள்ள 4948 வழக்குகள் பரிசீலனை எடுக்கப்பட்டு அதில் 2408 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 11 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரத்து 571க்கு உத்தரவுகள் வழங்கபட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், காரியாபட்டி, வத்திராயிருப்பு நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை