| ADDED : மே 24, 2024 02:00 AM
விருதுநகர்: விருதுநகரில் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்(ஆர்.டி.இ.,) 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை்காக 2727 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.மாவட்டத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் 86, மெட்ரிக் பள்ளிகள் 84 உள்ளன. இப்பள்ளிகளில் 1747 இடங்கள் ஆர்.டி.இ.,யில் (25 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 10 நாட்களாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. நேற்றுடன் வரை 2727 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 2685 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.29 விண்ணப்பங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சரியான ஆணவங்கள் இல்லாத விண்ணப்பங்கள் குறித்து உரிய நபர்களுக்கு தெரிவிக்கப்படும்.விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கூடுதல் விண்ணப்பம் வரப்பெற்ற இடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்னேற்பாடு செய்யப்படும், என்றனர்.