உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறந்த வெளியில் கொள்முதல் செய்த 60 ஆயிரம் டன் நெல்

திறந்த வெளியில் கொள்முதல் செய்த 60 ஆயிரம் டன் நெல்

விருதுநகர்: ராஜபாளையம் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சம் மூடை நெல்லில் 40 ஆயிரம் டன் மட்டுமே கிட்டங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 ஆயிரம் டன் கிட்டங்கிக்கு அனுப்பப்படவில்லை, என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ், வேளாண் இணை இயக்குனர் விஜயா, நேர்முக உதவியாளர் விவசாயம் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: பிப். 8 வரை ராஜபாளையம் பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சம் மூடை நெல்லில் 40 ஆயிரம் டன் மட்டுமே கிட்டங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 ஆயிரம் டன் கிட்டங்கிக்கு அனுப்பப்படவில்லை. திறந்தவெளியில் வீணாகி வருகின்றன. ஒரு மூடைக்கு ரூ.6 விவசாயிகள் தர வேண்டும் என லாரி தரப்பினர் நிர்பந்திக்கின்றனர். தற்போது நெல் மூடைகள் மழை, காற்றில் வீணாகி வருகின்றன. மேலும் கொள்முதலுக்கான பணம் ரூ.9 கோடி தர வேண்டும்.(இந்த கோரிக்கை உடன் நெல் மாலை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.)விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தென்னை பயிருக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க வேண்டும். அம்மையப்பன், சேத்துார்: மா பயிருக்கு இன்சூரன்ஸ் வேண்டும்.நாராயணசாமி, தமிழ் விவசாயிகள் சங்கம்: வீரசெல்லையாபுரம் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.தமிழ்செல்வன்: வெங்கடாசலபுரத்தில் இருந்து படந்தால் வரை உள்ள வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயத்திற்கு பயன்படுத்த உதவ வேண்டும்.செல்வம், இந்திய கம்யூ: திருச்சுழி பரளச்சியில் நேரடி கொள்முதல் நிலையம் மூன்று ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. வில்லிபுத்துார்: ராஜபாளையம் நகராட்சி கழிவுநீர் கொத்தன்குளம் கண்மாயில் கலக்கிறது. சுத்திகரிப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை பராமரிக்க வடிகால் அமைக்க வேண்டும். கண்மாய்க்குள் அருந்ததியர் குடியிருப்பு உள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.சமரசம், குட்டதட்டி செண்பகத்தோப்பு வட்டார விவசாயிகள் சங்கம்: பருவ நிலை மாற்றத்தால் மா பூ, பிஞ்சு வெப்பச்சலனத்தில் கருகி விட்டன.ஆதவன் வடிவேல், பா.ஜ.,: விருதுநகர் பாவாலியில் கவுசிகா நதியில் தடுப்பணை கட்ட வேண்டும்.கருப்பையா, சாத்துார்: காட்டுப்பன்றியால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு எப்போதுதேவராஜ், துணை இயக்குனர், புலிகள் காப்பகம்: வனவிலங்கு பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் வரப்பெற்றுள்ளது. விரைவில் விவசாயிகளுக்கு அனுப்பப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ