உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் மீன் மார்க்கெட்டில் 70 கி., கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

விருதுநகர் மீன் மார்க்கெட்டில் 70 கி., கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பார்மலின் கலந்து பனிக்கட்டிகளில் மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வதை ஆய்வு செய்ய வேண்டும் என நம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து விருதுநகர் மீன் மார்க்கெட்டில் இருந்து 70 கி கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்படும் மீன்களை வியாபாரிகள் பனிக்கட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் அருப்புக்கோட்டை பகுதிகளில் மனித உடலை பதப்படுத்த உதவும் பார்மலின் திரவம் கலந்த பனிக்கட்டிகளில் மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்தனர்.இது போன்று மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் மீன்களை விற்பனை செய்யும் இடங்களில் பார்மலின் திரவம் பயன்படுத்தவது குறித்து மீன்வளர்ச்சித்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நம் தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று காலையில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன் மார்கெட்டுகளில் மீன் வளர்ச்சித்துறை இன்ஸ்பெக்டர் அம்சா காந்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் கெட்டுப்போகியும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கி மீன்களை பறிமுதல் செய்து பினாயில், பிளிச்சிங் பவுடர் ஊற்றி அழித்தனர். இதை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மீன்மார்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு தரமான மீன்களை எப்படி கண்டறிந்து வாங்க வேண்டும் என்பது குறித்து மீன் வளர்ச்சித்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ