உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 291 மையங்களில் 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்; 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்

291 மையங்களில் 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்; 71,384 தேர்வர்கள் எழுதுகின்றனர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 71,384 பேர் எழுத 291 மையங்கள் தயார் நிலையில் உள்ளது.இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. நாளை (ஜூன் 9) டி.என்.பி.எஸ்.சி., மூலம் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 291 தேர்வு மையங்களில் 71,384 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 291 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 53 நடமாடும் குழுக்கள், துணை கலெக்டர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்கள், 291 தேர்வு மையங்களுக்கும் வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.விருதுநகரில் 48 மையங்களில் 10,752 பேர், அருப்புக்கோட்டை 41 மையங்களில் 10,002 பேர், காரியாபட்டி 14 மையங்களில் 3782, ராஜபாளையம் 52தேர்வு மையங்களில் 12,964, சாத்துார் 26 தேர்வு மையங்களில் 6113, சிவகாசி 45 மையங்களில் 12,046, ஸ்ரீவில்லிபுத்துார் 36 மையங்களில் 8526, திருச்சுழி 11 மையங்களில் 1790, வெம்பக்கோட்டை 7 மையத்தில் 1789, வத்திராயிருப்பு 11 மையங்களில் 3620 பேர் என 71,384 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும். தேர்வர்கள் காலை 9:00 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்களையும் அனுமதிக்கக்கூடாது. தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை