மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் முதல் முறையாக நோயாளிக்கு மூளையில் உடைந்த எலும்பு, ரத்தக்கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என டீன் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி 20. இவருக்கு தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவரை பரிசோதனை செய்ததில் இடது பக்க தலையின் முன் எலும்பு உடைந்து மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மே 29 ல் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கணபதி வேல் கண்ணன் தலைமையில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு மூளையில் உடைந்த எலும்பு, ரத்த கட்டி அகற்றப்பட்டது.தற்போது சிகிச்சை முடிந்து குருமூர்த்தி நலமாக உள்ளார்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என டீன் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago