உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்

குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்

சிவகாசி, : சிவகாசி சேர்மன் ஆறுமுகம் நாடார் ரோட்டில் பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக ஓடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சேர்மன் ஆறுமுகம் நாடார் ரோட்டில் பெண்கள் பள்ளி அருகே குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வீணாக ஓடுகிறது.குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடுவதால், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் குழாய் உடைந்த இடங்களில் ரோடு சேதம் அடைந்து விட்டது. எனவே உடனடியாக சேதமடைந்த இடங்களில் குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி