உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனம், குப்பை டயர் வைக்கும் கிடங்காக மாறிய உழவர் சந்தை; முழு பயன்பாட்டுக்கு வர எதிர்பார்ப்பு

வாகனம், குப்பை டயர் வைக்கும் கிடங்காக மாறிய உழவர் சந்தை; முழு பயன்பாட்டுக்கு வர எதிர்பார்ப்பு

விருதுநகர் : விருதுநகர் ஆர்.ஆர்., நகர் உழவர்சந்தை முழுமையாக செயல்படாததால் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், குப்பை, டயர் சேமிக்கும் கிடங்காக மாறியுள்ளது.விருதுநகர் ஆர்.ஆர்., நகர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உழவர் சந்தை தற்போது வரை முழுமையாக செயல்படாமல் உள்ளது. இதனால் வச்சக்காரப்பட்டியை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளில் விளையும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுற்றுச்சுவர், கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலைக்கு வந்துள்ளது.இங்கு பழுதான பேட்டரி வாகனம், லாரி நிறுத்தும் பார்க்கிங் இடமாக மாறியுள்ளது. மேலும் கடைகளில் பயன்படுத்த முடியாத லாரி டயர்களை அடுக்கி வைத்து நிறைத்தும், மற்றொரு கடையில் பாலிதீன் கவர்களை நிறைத்து குப்பை கிடங்காக மாற்றியுள்ளனர்.உழவர் சந்தை செயல்படாததால் இப்பகுதி மக்கள் அதிக விலை கொடுத்து காய்கறி வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இப்பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள்மது குடித்து விட்டு ஆங்காங்கே மது பாட்டில்களை வீசி செல்கின்றனர்.இதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆர்.ஆர்., நகர் உழவர் சந்தையை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை