உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கழிவுநீர் பாயும் ஊருணி, பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

கழிவுநீர் பாயும் ஊருணி, பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

காரியாபட்டி, : ரூ. பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டும் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாகம், கழிவு நீர் பாய்ந்து, பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் அகழி ஊருணி உள்பட பல்வேறு பிரச்னைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.மல்லாங்கிணர் பேரூராட்சி மேட்டுப்பட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 15 லட்சம் செலவில் ஆண், பெண் சுகாதார வளாகம், குளியல் தொட்டி கட்டப்பட்டது. இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது. மக்கள் திறந்தவெளியை நாடி வருகின்றனர். அங்குள்ள அகழி ஊருணியில் கழிவு நீரை தேக்குகின்றனர். பாசி படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அருகில் குடியிருப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி வார்டன் குடியிருப்பு சேதம் அடைந்து படுமோசமாக இருக்கிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் உள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் எக்ஸ்ரே பணியாளர் நியமிக்கப்பட்டார். இதுவரை மிஷின் வரவில்லை. நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ