உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைச்சர் திறந்து வைத்தும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை

அமைச்சர் திறந்து வைத்தும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்த கழிப்பறை 2 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சி 35வது வார்டை சேர்ந்தது ராமசாமிபுரம். இந்தப் பகுதியில் பொதுக்கழிப்பறை இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து தூய்மை இந்தியா 2.0. திட்டத்தின் கீழ் இப்பகுதியில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். ஒரு சில நாட்கள் செயல்பட்ட கழிப்பறை மின் மோட்டார் பழுதால் தண்ணீர் வராததை அடுத்து கழிப்பறை மூடப்பட்டது.கழிப்பறை இல்லாமல் வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர். ரோடு ஓரங்களை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நகராட்சி மின்மோட்டாரை சரி செய்து தண்ணீர் வருவதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் கழிப்பறையை மூடி வைத்துள்ளனர். லட்சக்கணக்கான நிதி செலவழித்து கட்டப்பட்ட கழிப்பறை தற்போது காட்சி பொருளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ