உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

சிவகாசி: சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி சுவாமிகளுக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாதாரதனைகள் நடந்தது. சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளினார், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.தினமும் இரவு சுவாமி, அம்பாளுடன் ரிஷப, காமதேனு, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் திருவிழாவன்று சட்டத் தேரோட்டம் ஜூலை 19ல் நடக்கிறது. ஜூலை 21ல் தபசு காட்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ