உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்

சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் பள்ளத்தால் விபத்து அபாயம்

சாத்துார் : சாத்துார் விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள தோண்டிய பள்ளத்தில் தேங்கிய கழிவுநீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சாத்துார் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கிழக்கு சர்வீஸ் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது. படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பில் போலீஸ் பீட்டில் இருந்து வடக்கே 100 மீட்டர் தொலைவில் பெரிய பள்ளம் உள்ளது.கிழக்கு பக்க சர்வீஸ் ரோடு வழியாக தீப்பெட்டி பண்டல் ஏற்றி வரும் லாரிகள், லோடு வேன்கள் , இருசக்கர வாகனங்கள் அடிக்கடி இவ்வழியாக நகருக்கு வந்து சென்று வருகின்றன.போக்கு வாத்து மிகுந்த சர்வீஸ் ரோட்டின் அருகிலேயே மிகப்பெரிய பள்ளம் உள்ள நிலையில் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது.மேலும் ஒரே நேரத்தில் இந்தப் பகுதியில் இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியாத நிலையும் உள்ளது.கிழக்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் உள்ள பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் முன் அதிகாரிகள் பள்ளத்தை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ