உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகை சூட பகீரத முயற்சியில் அ.தி.மு.க

வாகை சூட பகீரத முயற்சியில் அ.தி.மு.க

சிவகாசி: விருதுநகர் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க., வினர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்க தயாராகி வருகின்றனர்.கடந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சார்பில் அழகர்சாமி போட்டியிட்டார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அ.தி.மு.க.,வினர் லோக்சபா தேர்தலை கண்டு கொள்ளவில்லை. இதனால் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.தற்போதய தேர்தலில் விருதுநகர் தொகுதி மீண்டும் தே.மு.தி.க., விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2021ல் சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவிவில்லிபுத்துார் தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., தோல்வியை கண்டது. இது மாவட்டம் பொறுப்பாளராகவும், ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பெரும் சரிவாக கருதப்பட்டது.இதை சரிக்கட்ட தற்போதய லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., வெற்றி பெற செய்வதற்கு அ.தி.மு.க., வினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதையடுத்து கட்சி, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடத்தப்பட்டு கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தல் பணியை தீவிரமாக செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி