உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் திருவிழாவில் பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்

கோயில் திருவிழாவில் பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான் பட்டியை சேர்ந்தவர் முருகன், 56. இவர் பா.ஜ., ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார்.நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் அங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் தலைவர் பெருமாள்ராஜ் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சாமியாடிக்கு அருள் வராததால் மது அருந்திவிட்டு கோயிலுக்குள் யாரும் வராதீர்கள் என முருகன் கூறியுள்ளார்.இதனால் அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பன், சுந்தர், ராமர், தர்மர் ஆகியோர் முருகனுடன் தகராறு செய்து கீழே தள்ளிவிட்டு அடித்து, உதைத்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். முருகனை தாக்கிய நான்கு பேரையும் வன்னியம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ