உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.விருதுநகர் பெரிய பள்ளிவாசல் மைதானத்தில்பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை ஜமாத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் காலை 6:30 மணிக்கு நடந்தது. தொழுகையை முகம்மது இஸ்மாயில் நடத்தினார்.அதே போல கல் பள்ளிவாசலில் காலை 8:00 மணிக்கு ஜமாத் தலைவர் ஜெய்லானி தலைமையில் ஷா நவாஸ் கான், சின்னப் பள்ளிவாசல் காலை 7:15 மணிக்கு ஜமாத் தலைவர் நுார் அமீன் தலைமையில் முகையதீன், மதீனா பள்ளிவாசல் காலை 7:45 மணிக்கு ஜமாத் தலைவர்சுல்தான் அலாவுதீன் தலைமையில் அப்துல் ரஹ்மான், கூரைக்குண்டு மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் காலை 7:00 மணிக்கு ஜமாத் தலைவர்ஹபீப் முகம்மது தலைமையில் காசிம் தொழுகையை நடத்தினர்.ரோஜா நகர் அஹ்லுஸ் சுன்னத்வல் முஸ்லிம் ஜமாஅத் காலை 7:25 மணி, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் அய்யனார் நகர் மெயின் தெருவில் காலை 6:45 மணி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை காட்டுபாவா தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் தொழுகை நடந்தது இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளி வாசல்களில் தொழுகை நடந்தது. ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ